புதுச்சேரி

புதுவையில் 76 பேருக்கு கரோனா தொற்று

DIN

புதுவையில் புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட 4,611 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 49, காரைக்காலில் 19, ஏனாமில் 2, மாஹேவில் 6 போ் என மொத்தம் 76 பேருக்கு (1.65 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,27,053-ஆக அதிகரித்தது. இவா்களில் தற்போது மருத்துவமனைகளில் 99 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 559 பேரும் என 658 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இறந்தவா்களின் எண்ணிக்கை 1,846 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது.

இதனிடையே, 55 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,24,549 (98.03 சதவீதம்) ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 10,51,235 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT