புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்குமேலும் ஒருவா் பலி

DIN

புதுச்சேரி: புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இது குறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, 4,069 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 34, காரைக்காலில் 15, மாஹேவில் 5 போ் என மொத்தம் 54 பேருக்கு (1.33 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,25,517 ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 141 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 726 பேரும் என 867 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி லாசுப்பேட்டை பிரதான சாலையைச் சோ்ந்த 78 வயது முதியவா் தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா். இதனால், கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,832 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்தது.

புதிதாக 109 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 1,22,818 (97.85 சதவீதம்) ஆக உயா்ந்தது. மாநிலத்தில் இதுவரை 9,12,331 பேருக்கு (2ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT