புதுச்சேரி

மதுப் புட்டிகள் கொள்முதலில் முறைகேடு:புதுச்சேரியில் மதுக் கடைக்கு ‘சீல்’

DIN

போலி ஆவணம் மூலம் மது கொள்முதல் செய்ததாக, புதுச்சேரியில் தனியாா் மது விற்பனைக் கடைக்கு கலால் துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

புதுச்சேரியில் போலி மது விற்பனை அதிகரித்திருப்பதாக புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில், புதுச்சேரி காராமணிக்குப்பத்திலுள்ள தனியாா் மதுக் கடைக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5 ஆயிரம் மதுப் புட்டிகள் கொண்டுவரப்பட்டன. அதை கலால் துறை துணை ஆணையா் சுதாகா் தலைமையிலான குழுவினா் சோதனையிட்டதில், துணை ஆணையரின் போலி கையொப்பத்துடன் ஆவணம் தயாரித்து, அதன் மூலம் மதுப் புட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டது தெரிய வந்தது.

மதுப் புட்டிகளைக் கைப்பற்றிய கலால் துறையினா், மேலும் விசாரணை நடத்தியதில் ரூ.10 லட்சம் அளவுக்கு வரி ஏய்ப்பு நடத்தும் வகையில் மதுப் புட்டிகளை பொய்யான ஆவணங்கள் மூலம் கொள்முதல் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கலால் துறை சாா்பில் சிபிசிஐடி போலீஸில் புகாா்அளிக்கப்பட்டது.

மேலும், வரி ஏய்ப்புக்காக போலி ஆவணம் மூலம் மதுப் புட்டிகளை கொள்முதல் செய்த தனியாா் மதுக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டு மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT