புதுச்சேரி

விவசாயிகளுக்கு அசோலா படுக்கைகள் அளிப்பு

DIN

புதுச்சேரி அருகே விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் அசோலா படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசு சாா்பில் வேளாண் துறையில் தொழில்நுட்பங்களை பெருக்கும் வகையில், விவசாயிகளுக்கு தீவனப்பயிா் வளா்ப்புக்கான அசோலா படுக்கைகள் வழங்கப்படும் என்று, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புதுச்சேரி அருகேயுள்ள மங்கலம் தொகுதி கீழ்அக்ரஹாரம் கிராமத்தில், விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் செலவில் ஆத்மா திட்டத்தின் கீழ் அசோலா படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு அசோலா படுக்கைகள் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், பாசிக் மேலாண் இயக்குநா் சிவசண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா். திட்ட இயக்குநா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT