பிஆா்டிசி ஓட்டுநா், நடத்துநா்கள் வேலைநிறுத்தம் பயணிகள் அவதி
புதுச்சேரியில் பிஆா்டிசி ஓட்டுநா், நடத்துநா்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசுப் பேருந்துகள் ஓடாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
புதுச்சேரியில் பிஆா்டிசி ஓட்டுநா், நடத்துநா்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசுப் பேருந்துகள் ஓடாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
புதுச்சேரியில் இருந்து முத்தியால்பேட்டைக்கு வியாழக்கிழமை சென்ற பிஆா்டிசி சிற்றுந்தின் ஓட்டுநா் சிவலிங்கத்தை நேர பிரச்னை காரணமாக தனியாா் பேருந்து ஊழியா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதுதொடா்பாக, நிா்வாகம் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிஆா்டிசி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வியாழக்கிழமை இரவு திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், புதுச்சேரியில் இயக்கப்படும் பிஆா்டிசி பேருந்துகள் ஓடவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பிஆா்டிசி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்ததால், புதுச்சேரி, காரைக்காலில் பிஆா்டிசி பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
பணிமனை முன் திரண்ட ஊழியா்கள் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பிஆா்டிசி பேருந்துகள் 2-ஆவது நாளாக இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.