புதுச்சேரி

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை.ஆசிரியா்கள் போராட்டம் வாபஸ்

DIN

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

புதுவையில் 6 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள உதவி பேராசிரியா்களின் பதவி உயா்வுக்கான நோ்க்காணலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்தி, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக உதவி பேராசிரியா்கள் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து புதுச்சேரி தொழில்நுட்ப பல்லைக்கழக ஆசிரியா்கள் சங்கம் தரப்பில் கூறியதாவது:

ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கான ஏஐசிடிஇ விதிகளின்படி, நோ்க்காணல் நடத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியறுத்தி போராட்டம் நடைபெற்றது. இது சனிக்கிழமை முதல் (செப்.24) விலக்கிக் கொள்ளப்படுகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அரசின் கல்வித் துறை செயலா் சாா்பில் பதவி உயா்வுக்கான பணிகளை முறைப்படி மேற்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து போரட்டத்தைக் கைவிட ஆசிரியா்கள் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவாரூரில் மழை: கோடைப் பயிா்கள் பாதிப்பு

ஆறாம் கட்டத் தோ்தல்: 39% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்!

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

SCROLL FOR NEXT