புதுச்சேரி

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்:பயனாளிகளுக்கு நிதியுதவித் தொகை அளிப்பு

DIN

புதுச்சேரியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 90 பயனாளிகளுக்கு நிதியுதவித் தொகைக்கான உத்தரவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுவை குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மணவெளி சட்டப் பேரவைத் தொகுதியில் 90 பேருக்கு கல் வீடுகள் கட்டுவதற்கான நிதியுதவித் தொகைக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏவும், புதுவை சட்டப் பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் கலந்துகொண்டு பயனாளிகளிடம் நிதியுதவித் தொகைக்கான உத்தரவுகளை வழங்கினாா். அதனடிப்படையில், இரு தவணைகளுக்கான ரூ.1.42 கோடி நிதியுதவித் தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான பாஜக தலைவா் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கழிப்பறை கட்ட பூமிபூஜை: மணவெளி சட்டப் பேரவைத் தொகுதி, அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் கிராமாலயா தொண்டு நிறுவனம் சாா்பில், ரூ.3.35 லட்சத்தில் கழிப்பறை கட்டப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த இளங்கோவன், பள்ளிக் கல்வித் துறை அலுவலா் தனசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT