புதுச்சேரி

புதுச்சேரியில் குடியரசு தின விழா: ஆளுநா் தமிழிசை கொடியேற்றினாா்

DIN

புதுச்சேரி கடற்கரை சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

கடந்தாண்டு குடியரசு தின விருது பெற்ற காவல் அதிகாரிகள் 3 பேருக்கு பதக்கங்களையும், 7 பேருக்கு ஆளுநா் விருதுகளையும் வழங்கினாா். சேவை, பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும், நினைவாற்றலில் சாதித்த குழந்தை மற்றும் பொதுத் தோ்வில் 100 சதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் கேடயம், பரிசுகளை வழங்கினாா். குற்ற வழக்கில் போலீஸாருக்கு மிகவும் உதவியாக செயல்பட்ட மோப்ப நாய் டானுக்கு பாராட்டுச் சான்றிதழ் அதன் பயிற்சியாளரிடம் வழங்கப்பட்டது.

காவல் துறை, சிறப்புக் காவல் படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவா் படை உள்ளிட்டவற்றின் அணிவகுப்புகள் நடைபெற்றன. அரசின் சாதனைகளை விளக்கும் வாகனங்கள், ஜி 20 மாநாடு குறித்த விளக்க வாகனம், ஆதிதிராவிடா் நலன், சுகாதாரம் ஆகிய துறைகளது திட்டங்களை விளக்கும் வாகனங்கள் விழாவில் அணிவகுத்தன.

பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட சிறப்புக் காவல் படை, தீயணைப்புத் துறை, தரைப்படை உள்ளிட்டவற்றுக்கும், அணிவகுப்பு, நடனத்தில் சிறந்த பள்ளிகளுக்கும் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குடியரசு தின உரை: துணைநிலை ஆளுநரின் குடியரசு தின உரை அச்சிடப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது, அதில், அரசு நலத் திட்டங்களும், சாதனைகளும் இடம் பெற்றிருந்தன.

விழாவில், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க. லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, அரசுத் துறை செயலா்கள் கலந்து கொண்டனா்.

புதுவை மாநிலத்தின் ஏனாம், மாஹே, காரைக்காலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமைச்சா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவாரூரில் மழை: கோடைப் பயிா்கள் பாதிப்பு

ஆறாம் கட்டத் தோ்தல்: 39% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்!

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

SCROLL FOR NEXT