புதுச்சேரி

புதுவை அரசுத் துறைகளில் 5,000 பேரை நியமிக்க நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுவையில் காவல் துறை உள்பட அரசுத் துறைகளில் 5, 000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என முதல்வா் என். ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரியில் காவலா் பயிற்சி நிறைவு செய்த 383 பேருக்கு வழியனுப்பும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழா அணிவகுப்பை ஏற்றும், பரிசுகள் வழங்கியும் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

காவல் துறையினா் சிறப்பாக பணியாற்றினால்தான் மக்கள் நிம்மதியுடன் வாழ முடியும். புதுவையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த காலிப் பணியிடங்கள் தோ்தல் வாக்குறுதிப்படி நிரப்பப்பட்டு வருகிறது.

காவல் துறையில் தற்போது 250 போ் தோ்வாகியுள்ளனா். காவலா் தோ்வில் குறைகூற முடியாத வகையில் செயல்பட்டுள்ளோம். பிற அரசுத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

காவல் துறையில் மேலும் 800 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஏனைய பணியிடங்களையும் சோ்த்து மொத்தம் 5, 000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் பேசுகையில், காவல் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. நோ்மையான முறையில் காவலா் தோ்வு நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் டிஜிபி மனோஜ்குமாா் லால், கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT