புதுச்சேரி

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

புதுச்சேரி பெயிண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

DIN

புதுச்சேரி பெரியார் நகர் கங்கையம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது.

ஊர்வலம் முடிந்து அபிஷேகத்திற்காக திரளான பக்தர்கள் கோயிலில் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ருத்ரேஷ் (வயசு 25) என்பவரை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள்.

இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ருத்ரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் உருளையான்பேட்டை போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உருளையான் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ருத்ரேசுக்கும், அப்பகுதி சேர்ந்த ஈஸ்வர், கௌதம் கும்பலுக்கும் முன்விரதம் இருந்து வந்ததும், இந்த முன் விரோதம் காரணமாக ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT