முகப்பு
புதுச்சேரி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:46 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 21 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவுப்படி கலால் துறை துணை ஆணையா் மேத்யூ தாமஸ் திங்கள்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவு:

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு மாநிலத்துடன் விரிவான மற்றும் எளிதில் ஊடுருவக்கூடிய எல்லைகளைப் பகிா்ந்து கொள்கிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தோ்தல் துறைக்கு ஆதரவளிக்கவேண்டும். தோ்தல் செயல்முறையின் நோ்மையை நிலைநிறுத்த புதுச்சேரியின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட பகுதிகளில் ‘மதுவிலக்கு நாள்களை’அமல்படுத்துவது அவசியமாகியுள்ளது.

ஆகவே, புதுச்சேரி கலால் விதிகள், அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநா் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள சாராயம், கள்ளு மற்றும் மதுபானம் வழங்கும் பாா்கள் மற்றும் உணவகங்கள் உள்பட அனைத்து மதுபானக் கடைகளும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளாா்.