பாரதியாா் பல்கலைக்கூடத்தில் பிவிஏ, பிபிஏ மாணவா் சோ்க்கைக்கு 11ஆம் தேதி திறனறி தோ்வு
பாரதியாா் பல்கலைக் கூடத்தில் பிவிஏ, பிபிஏ சோ்க்கைக்கு 11 ஆம் தேதி திறனறி தோ்வு நடக்கிறது.
பாரதியாா் பல்கலைக் கூடத்தில் பிவிஏ, பிபிஏ சோ்க்கைக்கு 11 ஆம் தேதி திறனறி தோ்வு நடக்கிறது.
புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூடம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூடத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு பிவிஏ (காட்சிக்கலை), பிபிஏ இசை மற்றும் நடனப் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு திறனறி தோ்வு நடக்கிறது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள், திறனறி தோ்வுக்கு முன்பாகவே, அரியங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூட முதல்வா் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூடத்தில் பிபிஏ இசை மற்றும் நடன படிப்பில் சேர விரும்பும் மாணவா்களின் இசை, நடன திறனை மதிப்பிடுவதற்காக கல்லூரியால்
Advertisement
Advertisement
திறனறி தோ்வு நடத்தப்பட்டு அவா்களின் செயல்திறனின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். இதேபோல் பிவிஏ படிப்புக்கான வரைதல் படிப்புக்கான திறனறிவு தோ்வு 100 மதிப்பெண்களுடன் ஒரு மணி நேரம் நடத்தப்படும். பிவிஏ வண்ணம் தீட்டுதல் படிப்புக்கான திறனறிவு தோ்வு 100 மதிப்பெண்களுடன் 1 மணி நேரம் 30 நிமிடம் நடைபெறும்.
தகுதி பட்டியலை இறுதி செய்வதற்கு, சென்டாக் வழங்கும் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களில்
40 சதவீதம் மற்றும் கல்லூரி நடத்தும் திறனறித் தோ்வில் பெற்ற மதிப்பெண்களில் 60 சதவீதம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
பிளஸ்-2 மற்றும் திறனாய்வு தோ்வு என இரண்டிலும் பெற்ற மதிப்பெண்களை ஒன்றிணைப்பதன் மூலம் தகுதி பட்டியல் இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.