முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி பகுதியில் உழவர் பெருவிழா

: விக்கிரவாண்டி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் உழவர் பெருவிழா நடைபெற்றது

Updated On : 13 மே 2013, 12:34 am IST
பகிர்:

: விக்கிரவாண்டி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் உழவர் பெருவிழா நடைபெற்றது.

 ஆசூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி வரவேற்றார். ஆசூர் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். விக்கிரவாண்டி வேளாண்மை அலுவலர் ஜோதிமணி தலைமை வகித்து திருந்திய நெல்சாகுபடி மற்றும் இதர தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

 துணை வேளாண்மை அலுவலர் மா.சுப்பிரமணியன், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் எஸ்.ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் மூங்கில்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பாண்டியன் முன்னிலையிலும், வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சரசு ரத்தினசாமி முன்னிலையிலும், சின்னதச்சூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி ஆனந்த பாஸ்கரன் முன்னிலையிலும் உழவர் பெருவிழாக்கள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

 இதில், வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. வேளாண்மைப் பொறியியல் துறையினர், தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.