விழுப்புரம்

மக்கள் தொடர்பு முகாமில் 88 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

தினமணி

வானுôர் வட்டம், உப்புவேலுôரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 உப்புவேலூர் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு வட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வேலாயுதம், மண்டல துணை வட்டாட்சியர் ஏழுமலை, வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற விழுப்புரம் கோட்டாட்சியர் க.சரஸ்வதி, 88 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 இருளர் சமூகத்தினருக்கான சாதிச்சான்று 12 பேருக்கும், மாதாந்திர முதியோர் உதவி தொகைக்கான ஆணைகள் 20 பேருக்கும், மின்னணு குடும்ப அட்டைகள் 24 பேருக்கும், பட்டா மாற்றம் 14 பேருக்கும், வேளாண்துறை மூலம் 6 பேருக்கு நீர்தூவான் சாதனங்களும், இயந்திர பூச்சி மருந்து தெளிப்பானும் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.
 வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், சமூகநல அலுவலர் ரீட்டாமேரி, வருவாய் ஆய்வாளர்கள் ஷீலாராணி, ராஜ்குமார், வெங்கடேசன், வேளாண்மை அலுவலர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர்கள் சஷ்டிகுமார், செந்தில்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT