விழுப்புரம்

பிளஸ் 1 சேர்க்கையில் இடஒதுக்கீடு வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

தினமணி

பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
 விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு தலைமை வகித்தார்.
 மாவட்டப் பொருளாளர் பிரின்ஸ் சோமு, செய்தித் தொடர்பாளர் தமிழேந்தி, மாநில நிர்வாகிகள் சேரலாதன், கார்வேந்தன், வீரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் சிறப்புரையாற்றினார்.
 மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்த மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டிப்பது, அரசு குவாரியில் லாரிகளில் மணல் எடுத்து வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பதைக் கண்டிப்பது எனவும், உள்ளூர் தேவைகளுக்காக, மாட்டு வண்டிகளில் மணல் வழங்க அனுமதிக்க வேண்டும்,
 மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில், அறிவியல் பாடப் பிரிவு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வருகிற ஆக.17-இல் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலர் சரவணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT