முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை புத்தகத் திருவிழா

விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.6) தொடங்கி 10 நாள்கள் வரை நடைபெறவுள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:53 am IST
பகிர்:

விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.6) தொடங்கி 10 நாள்கள் வரை நடைபெறவுள்ளது.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லம்தோறும் நூலக இயக்கம், வீடுகள் தோறும் நூலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில், அந்த இயக்கம் சார்பில் ஏப்.6-ஆம் தேதி தொடங்கி 
15-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சியில் மாநிலத்தில் உள்ள பல்வேறு பதிப்பாளர்களும், புத்தக விற்பனையாளர்களும் கலந்துகொள்கின்றனர். புத்தகக் கண்காட்சி தினமும் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையும் நடைபெறும். 
மேலும், நூல்வெளியீட்டு விழா, இலக்கிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது. இந்த இயக்கத்தின் புத்தக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ந.ராஜாராம், மு.கார்த்திக், இ.ரமேஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 
ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்களை வைத்திருக்க வேண்டும், நூலகத்தை அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். வீட்டில் நூலகம் வைப்பதற்காக அதிகளவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சலுகை விலையில் புத்தகங்களை வழங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments