முகப்பு
விழுப்புரம்

மனித பாதுகாப்பு அமைப்பினர் ரத்த தானம் 

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் மனித பாதுகாப்பு அமைப்பு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:48 am IST
பகிர்:

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் மனித பாதுகாப்பு அமைப்பு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது.
 தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மனித பாதுகாப்பு அமைப்பின் மாநில அமைப்பாளர் ஜே.கே. கபீர்பாஷா தலைமை வகித்தார்.
 மண்டல அமைப்பாளர் எம்.எ.கொளஞ்சியப்பன், கடலூர் மாவட்ட தலைமை அமைப்பாளர் செல்வமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 மனித பாதுகாப்பு அமைப்பின் விழுப்புரம் மாவட்டத் தலைமை அமைப்பாளர் எம்.எஸ்.எஸ்.செல்வம், கள்ளக்குறிச்சி ஒன்றிய அமைப்பாளர் முருகன் ஆகியோர் வரவேற்றனர்.
 மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் (பொ) ச.நேரு, துணை இயக்குநர் ப.ஜெமினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் க.பழமலை, வட்டார மருத்துவ அலுவலர் டி.பங்கஜம், நகராட்சி மருத்துவ அலுவலர் எஸ்.சிவக்குமார் தலைமையில் ரத்த வங்கிக் குழுவினர் 30-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர்.
 முகாமில் மொத்தம் 116 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முடநீக்குவியல் மருத்துவர் எஸ்.சங்கர், மனித பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் வி.சந்திரசேகர், கள்ளக்குறிச்சி மூத்த வழக்குரைஞர் கே.பாண்டுரங்கன், வழக்குரைஞர் பிரிவு மாநில துணை அமைப்பாளர் எம்.பேரிளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் ஆர்.ராஜசேகர் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.