அவலூர்பேட்டையில் அப்பர் சுவாமி குருபூஜை
மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மாலை அப்பர் சுவாமி குரு பூஜை நடைபெற்றது.
மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மாலை அப்பர் சுவாமி குரு பூஜை நடைபெற்றது.
நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் என்ற அப்பர் சுவாமிகளுக்கு ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் இந்தக் கோயிலில் குரு பூஜை, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும் அர்ச்சனையும், அவரது தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற பிறகு மஹா தீபாராதனையும் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குருபூஜைக்கான ஏற்பாடுகளை பௌர்ணமி அமாவாசை குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.