மாவட்டத் தலைநகரங்களில் மீன் அங்காடி அமைக்கக் கோரிக்கை
விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மீன் அங்காடி அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ் மாநில பருவதராஜகுல மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மீன் அங்காடி அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ் மாநில பருவதராஜகுல மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
பருவதராஜ மீனவர் பொது அறக்கட்டளை, தமிழ் மாநிலப் பருவதராஜகுல மீனவர் சங்கம் ஆகியவவை சார்பில் மாநில சங்க தேர்தல் பொதுக்குழுக் கூட்டம், டாக்டர் ஆர்.நடராஜன் நினைவாக மாணவர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசளிப்பு ஆகிய இருபெரும் விழா விழுப்புரம் - திருச்சி சாலையில் உள்ள பருவதராஜகுல சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அறக்கட்டளை முன்னாள் தலைவர் ஆர்.பி.நாகராஜன் தலைமை வகித்தார். பருவதராஜ மீனவர் பொது அறக்கட்டளை நிறுவனர் இ.சாமிகண்ணு, தமிழ் மாநில பருவதராஜகுல மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பரமசிவம், அறக்கட்டளைத் தலைவர் எம்.பூமிநாதன், பொருளாளர் ஜி.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தர். தமிழ் மாநிலப் பருவதராஜகுல மீனவர் சங்கச் செயலர் ஆர்.தமிழரசு வரவேற்றார்.
"மீனவர் குரல்' ஆசிரியர்
பா.வீரமணி கலந்துகொண்டு, டாக்டர் ஆர்.நடராஜன் நினைவாக மாணவ, மாணவிகளுக்கான கல்வி ஊக்க சிறப்புப் பரிசளித்து சிறப்புரையாற்றினார். உயர்நிலைக்குழு உறுப்பினர் பி.அண்ணாமலை, எம்.முனுசாமி நாட்டார், ஆர்.சின்னமாரிமுத்து, முன்னாள் செயலர் வி.ராகவன், துணைத் தலைவர் சி.குப்புராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மீனவர் சமுதாய மாணவ, மாணவிகள் 60 பேருக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது.
அறக்கட்டளை செயலர்
விஜயக்குமார் நன்றி கூறினார். விழாவில், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் மீன் பிடிக்க உள்நாட்டு மீனவர்களுக்கு மட்டுமே உரிமையளித்த
தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற அனைத்து மாவட்ட தலைநகரங்க ளிலும் மீன் மார்க்கெட் (அங்காடி) அமைக்க வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.