விழுப்புரம்

பூட்டிய வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

DIN

திண்டிவனத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் தங்க நகைகளை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திண்டிவனம் கோபாலபுரம் மேற்குத் தெருவில் வசிப்பவர் சம்பத்(60). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்.இவரது வீட்டின் மேல்மாடியில் இவரது மகன் வரதராஜன் குடும்பத்துடன் வசிக்கிறார். சம்பத் அதே பகுதியில் தான் புதிதாக கட்டிய வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு குடும்பத்தினருடன் சென்று தூங்கினார்.
வெள்ளிக்கிழமை காலை பழைய வீட்டுக்கு வந்த போது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 3 பீரோக்களில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸmர் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் வழிப்பறி: சிறுவன் உள்பட 4 போ் கைது

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தைக் கைவிடக்கூடாது: ராமதாஸ்

குண்டு மல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

மின் தடை: பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT