விழுப்புரம்

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு

DIN

விழுப்புரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மனைவி வள்ளியம்மை (70). இவர், திங்கள்கிழமை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 
கலந்துகொள்ள வந்தார்.
திருமண நிகழ்ச்சி முடிந்து அன்று மாலை ஊருக்குச் செல்ல பழைய பேருந்து நிலையம் சென்றார். அங்கு, வள்ளியம்மை நகைகள் அணிந்திருப்பதை நோட்டம் விட்ட பெண், அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, நகைகளை அணிந்து கொண்டு பேருந்தில் பயணித்தால், யாராவது பறித்துச் சென்று விடுவார்கள். அதனால், நகைகளை கழற்றி பாதுகாப்பாக பையில் வைக்குமாறு கூறினாராம். 
இதை நம்பிய வள்ளியம்மை தான் அணிந்திருந்த தங்க வளையல்கள், சங்கிலி உள்ளிட்ட 6 பவுன் நகைகளை  கழற்றி பையில் வைத்தார்.
பின்னர், பேருந்தில் ஏறி பையைப் பார்த்தபோது, நகைகளைக் காணவில்லையாம். திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.1.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியம்மை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT