ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கம் வலியுறுத்தியது.
அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கம் வலியுறுத்தியது.
இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பாளர் சிவபாலன் தலைமை வகித்தார். எஸ்சி, எஸ்டி பெடரேசன் நிர்வாகி தனசேகரன், சங்கப் பொறுப்பாளர்கள் வீரமுத்து, ஏழுமலை, பரசுராமன், கணேசன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சங்க கொள்கை பரப்புச் செயலர் சேகரலிங்கம் வரவேற்றார். அரசு ஆதிதிராவிடர் மாநிலக் குழு உறுப்பினர் மகாராஜன், எஸ்சி, எஸ்டி சங்க நிர்வாகி தனபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பேசினர். ராஜேஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரனுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும், அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுத் துறைகளை தனியார் மயமாக்கக் கூடாது, மரக்காணத்தில் உப்பள பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.