விழுப்புரம்

போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடி 

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க போக்குவரத்துக் காவலர்களுக்கு தொப்பி, கருப்புக் கண்ணாடிகளை காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்மையில் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆர். ராஜ் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் தங்க.விஜய்குமார்,  உதவி ஆய்வாளர்கள் பெ.தர்மராஜ், சா.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழாண்டு வெயிலின் தாக்கம் கள்ளக்குறிச்சி பகுதியில் அதிகமாக உள்ளது. போலீஸார் வெயிலில் நின்று போக்குவரத்தை சீர் செய்வதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, கண்ணாடியை காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் வழங்கியதோடு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தாகம் தணிக்க   காவலர்களுக்கும் (லெமன்) எலுமிச்சை பழச்சாறு,  நீர் மோரை வழங்கினார்.  போக்குவரத்து காவலர்கள் சாமிதுரை, தேன்மொழி உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலரும் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT