விழுப்புரம்

அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

DIN

எலவனாசூர்கோட்டை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டையில் ஸ்ரீபிரஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் மஹோத்சவ விழா மார்ச் 19-ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் தொடங்கி நடைபெற்றது.
 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் பொதுமக்கள் பங்களிப்புடன் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 தேரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.குமரகுரு வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தார்.
 இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT