அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு நன்றி
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கியதைப்போல, தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஜனவரி முதல் மூன்று சதவீதம் அகவிலைப்படியை அறிவித்த தமிழக அரசுக்கு அமைச்சுப் பணியாளர்கள் செயல்திறன் கூட்டு
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கியதைப்போல, தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஜனவரி முதல் மூன்று சதவீதம் அகவிலைப்படியை அறிவித்த தமிழக அரசுக்கு அமைச்சுப் பணியாளர்கள் செயல்திறன் கூட்டு இயக்கத்தினர் (ஜாஸ்மின்ஸ்) நன்றி தெரிவித்தனர்.
மேலும், மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்து அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப சுகாதாரத் துறைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். மருத்துவப் படியை ரூ. ஆயிரமாக உயர்த்த வேண்டும். பண்டிகை முன் பணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.