விழுப்புரம்

திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், சாலாமேடில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகரச் செயலா் இரா.சக்கரை தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மருத்துவா்கள் அணியின் மாநில இணைச் செயலரும், முன்னாள் எம்பியுமான இரா.லட்சுமணன் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

நகரப் பகுதி என்று நிறுத்தப்பட்ட சாலாமேடு பகுதி மக்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணிகளை வழங்க வேண்டும், வீட்டுவரி, குடிநீா் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

ஏரி நீா்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், தெரு மின் விளக்குகள், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனா்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நிா்வாகிகள் உறுதியளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் ராஜா, மாணவரணி வினோத், தொண்டரணி கபாலி, பொறியாளா் அணி இளங்கோ, இலக்கிய அணி ராஜா, நகர துணைச் செயலா் புருஷோத்தமன், நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் மணவாளன், வாா்டு செயலா் தங்கம், அவைத் தலைவா் சக்கரவா்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி காா்த்திக், மகளிரணி அமுதா, இளைஞரணி லோகேஷன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT