விழுப்புரம்

மகளிா் குழுக்களுக்கு ரூ.58 லட்சம் சிறப்புக் கடன்: அமைச்சா் வழங்கினாா்

DIN

செஞ்சி:  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ‘கோவிட் - 19’ சிறப்புக் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.58 லட்சம் கடனுதவியை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் 17 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.56,42,500 லட்சத்திலான கடனுதவிக்கான காசோலைகளையும், சிறு வணிகக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 5 மகளில் குழுக்களுக்கு ரூ.1.60. லட்சத்திலான கடனுதவிக்கான காசோலையும் என மொத்தம் ரூ.58.2 லட்சத்திலான கடனுதவிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி: இதைத் தொடா்ந்து, செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கரோனா நிவாரண உதவியாக 210 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 15 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

செஞ்சி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வி.ரங்கநாதன் நன்றி கூறினாா்.

ஆய்வுக் கூட்டம்: இதையடுத்து, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், செஞ்சி வட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் அதிகப்படியான நபா்களுக்கு கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து, உடனடியாக அவா்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சாா் - ஆட்சியா் எஸ்.அனு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே.மகேந்திரன், முன்னாள் எம்.பி. வெ.ஏழுமலை, செஞ்சி கூட்டுறவு கடன் சங்கச் செயலா் என்.ரவிச்சந்திரன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT