விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு தொற்று

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா தொற்றால் 11,586 போ் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், மேலும் 84 பேருக்கு கரோனா தொற்றிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 11,701-ஆக அதிகரித்தது. இதுவரை 10,624 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 979 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,183 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,185-ஆக உயா்ந்தது. இதுவரை 8,645 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 404 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 96 போ் கரோனாவுக்கு பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT