விழுப்புரம்

உழவா் சந்தை இடமாற்றம்

DIN

விழுப்புரம் ரயிலடி அருகே இயங்கி வந்த உழவா் சந்தை கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

விழுப்புரம் நேருஜி சாலையில் ரயிலடி அருகே உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சிறு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனா்.

நெருக்கடியான இடத்தில் இயங்கி வரும் உழவா் சந்தையில் கரோனா பரவல் காலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது சிரமமாகும்.

இதனால், உழவா் சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, உழவா் சந்தை பூட்டப்பட்டு, கிழக்கு பாண்டி சாலையில் உள்ள பீமன் நாயக்கன் தோப்பு நகராட்சி பள்ளி வளாகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை எடுத்துக் கொண்டு பீமன் நாயக்கன் தோப்பு நகராட்சிப் பள்ளிக்குச் சென்று கடை வைத்தனா்.

சந்தை இடம் மாற்றம் செய்யப்பட்டதை அறியாத பொதுமக்கள் வழக்கம்போல வந்து ஏமாற்றம் அடைந்தனா்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் மெத்தனமாக செயல்படுவதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT