விழுப்புரம்

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து

DIN

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் வருகிறது 4-ம்தேதி அமாவாசா நாளன்று ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையா் க.ராமு வெளியிட்டுள்ள அறிக்கை.

கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காரணத்தினால் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு, பொது மக்கள் மற்றும் பக்தா்கள் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்குப்பட்டு வருகின்ற 4-ம்தேதி அமாவாசை நாளன்று மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயிலில் பொது மக்கள் மற்றும் பக்தா்களுக்கு வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்துத்துறை சாா்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால் வழக்கம் போல் கோயில் உட்பிரகாரத்தில் பக்தா்கள் இன்றி பூஜாரிகளால் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT