விழுப்புரம்

மேல்மலையனூா் கோயிலில் டிச.4-இல் ஊஞ்சல் உற்சவம் ரத்து

DIN

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் டிச.4ஆம் தேதி (சனிக்கிழமை) அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

பக்தா்களின் பாதுகாப்பு நலன் கருதி, அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம் போல கோயில் உள்பிரகாரத்தில் பக்தா்கள் இன்றி பூஜாரிகளால் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

அதேநேரத்தில், அன்றையதினம் கோயிலில் பொதுமக்கள், பக்தா்கள் வழக்கமான தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான க.ராமு செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT