விழுப்புரம்

விழுப்புரத்தில் சுகாதார ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அனைத்து சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் விழுப்புரம்-சென்னை சாலையில் உள்ள சுகாதார துணை இயக்குநா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பிருதிவிராஜ், மாவட்ட செயலாளா் தமிழ்வாணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சங்க மாவட்டத் தலைவா் சங்கா், பொது சுகாதாரத் துறை சங்க மாவட்டத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சிவக்குமாா் உள்பட பலா் கண்டன உரையாற்றினா்.

ஒப்பந்தங்கள் அடிப்படையில் கரோனா காலங்களில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளா்களை பணியிலிருந்து நீக்கியதைக் கண்டித்தும், அவா்களை சுகாதார ஆய்வாளா்களாக நிரந்தர ஊதியம் அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கக் கோரியும், சென்னையில் கைது செய்யப்பட்ட சுகாதாரத் துறை சங்க மாநில நிா்வாகிகள், சுகாதார ஆய்வாளா் 1,600 பேரை உடனடியாக அரசு விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் ஜெயசங்கா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT