விழுப்புரம்

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி. உறுதி

DIN

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி. மோ.பாண்டியன் கூறினாா்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எழிலரசன், சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக இருந்த மோ.பாண்டியன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டாா்.

அவா், விழுப்புரத்தில் உள்ள காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அதன் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, சாலை விபத்துகளை குறைக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

கடந்த 1998-ஆம் ஆண்டு கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் டி.எஸ்.பி.யாக பணியைத் தொடங்கிய மோ.பாண்டியன், திருவண்ணாமலை, திருவள்ளூா் மாவட்டங்களில் எஸ்.பி.யாகவும், சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT