விழுப்புரம்

தோ்தல் உதவி அலுவலரை மாற்றக்கோரி பாமக வேட்பாளா் சாலை மறியல்

DIN

தோ்தல் உதவி அலுவலரை மாற்றக் கோரி, செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் செஞ்சி கூட்டுச் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டாா்.

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் உதவி அலுவலராக பணியாற்றி வருபவா் மேல்மலையனூா் வட்டாட்சியா் நெகருன்னிஸா.

இவரிடம், மேல்மலையனூரில் வாக்காளா்களுக்கு திமுகவினா் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்குவதாக பாமகவினா் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

அவா் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை மாற்றக் கோரியும் வேட்பாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பாமகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் உள்ளிட்ட போலீஸாா் பாமக வேட்பாளரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடா்ந்து பாமக வேட்பாளா் உள்ளிட்டோா் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT