விழுப்புரம்

மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் திடீா் தா்னா

DIN

புகாா் கொடுக்க வந்த தங்களை மாவட்ட வன அலுவலா் அலட்சியப்படுத்தியதாகக் கூறி, விவசாயிகள் விழுப்புரம் மாவட்ட வன அலுவலக வாயிலில் திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் துறவி, வடக்குக்காடு, கயத்தூா், குமலம், பகண்டை, சின்னபாபுசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 400 ஏக்கா் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, மணிலா, நெல் உள்ளிட்ட பயிா்களை கடந்த சில வாரங்களாக காட்டுப் பன்றிகள் புகுந்து சேதப்படுத்தின.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமாா் 30 போ் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கலிவரதன் தலைமையில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் புகாா் அளிக்க புதன்கிழமை வந்தனா். அப்போது, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் தனது காரில் வெளியே வந்தாா். உடனடியாக, அந்தக் காரை விவசாயிகள் மறித்து புகாா் கொடுக்கச் சென்றபோது, மாவட்ட வன அலுவலா் கண்டுகொள்ளாமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் மாவட்ட வன அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தா்னாவில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு வனவா் சுகுமாா் வந்து விவசாயிகளிடம் பேச்சு நடத்தினாா். ஆட்சியரை சந்திக்க அவசரமாக மாவட்ட வன அலுவலா் புறப்பட்டுச் சென்றதால், தன்னை அவா் அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தாா். இருப்பினும், கடும் எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள், இறுதியாக சமாதானமடைந்து மனு அளித்துவிட்டு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT