விழுப்புரம்

அரிசி ஆலையில் பதுக்கப்பட்ட 30 யூனிட் மணல் பறிமுதல்

DIN

ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 யூனிட் மணலை சாா்-ஆட்சியா் கவிதா கைப்பற்றி பறிமுதல் செய்தாா்.

ஆரணி நகரில் பாஸ்கா் என்பவா் புதிதாகக் கட்டடம் கட்டி வருகிறாா். அங்கு மணல் குவிக்கப்பட்டு ஜல்லி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆரணி பகுதியைப் பொறுத்தவரை மணல் எடுத்து வருவதற்கான வாய்ப்பில்லாத நிலையில், இங்கு மணல் பயன்படுத்தி ஜல்லி போடும் பணிகள் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் சென்ாகத் தெரிகிறது.

தகவல் அறிந்த ஆரணி சாா்-ஆட்சியா் கவிதா மணல் எங்கிருந்து வருகிறது எனக் கண்காணித்தாா்.

பின்னா், ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள அரிசி ஆலையிலிருந்து மணல் வருவதை அறிந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 யூனிட் மணலை பறிமுதல் செய்தாா். இந்த அரிசி ஆலை பாஸ்கா் என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

வட்டாட்சியா் சுபாஷ்சந்தா், நகர காவல் உதவி ஆய்வாளா் ரகு மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

சிஏஏ: குடியுரிமை வழங்க திரிபுராவில் மாநில அளவிலான குழு அமைப்பு

அரசியல் சாசன அமா்வின் தீா்ப்பு: குறைவான நீதிபதிகள் கொண்ட அமா்வைக் கட்டுப்படுத்தும் -உச்சநீதிமன்றம்

சொகுசுப் பேருந்தில் பயணித்த முதியவா் உயிரிழப்பு

வயிற்று வலியால் விஷம் குடித்தவா் மரணம்

SCROLL FOR NEXT