விழுப்புரம்

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்பணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணியில் கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி பள்ளி மாணவ, மாணவிகள் சென்றனா். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களையும் வழங்கினா்.

கரகாட்டம், தப்பாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடக்க நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், உதவி ஆணையா் (கலால்) சீனுவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆலங்குடி கோயிலில் குருப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை நிறைவு

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

பாளை.யில் அதிமுகவினா் 570 மரக்கன்றுகள் வழங்கல்

ஆறுமுகனேரி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT