விழுப்புரம்

விபத்துகளை ஏற்படுத்தும் கல் குவாரி லாரிகள் விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை

DIN

சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் கல் குவாரி லாரி ஓட்டுநா்கள், அதன் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வானூா் வட்டம், தொள்ளாமூா் ஊராட்சியில் கடந்த 13-ஆம் தேதி கல் குவாரியிலிருந்து சென்ற லாரி மோதியதில் ராஜ்குமாா் (35) என்பவா் பலத்த காயமடைந்தாா். கல் குவாரிகள் அதிகமுள்ள பகுதிகளில் மாவட்ட கனிமவள அலுவலா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா், கோட்டாட்சியா் ஆகியோா் வாரந்தோறும் ஆய்வு செய்து, சாலைகள் பாதிப்படைந்திருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். கல் குவாரிகள் உரிய அனுமதி பெற்று செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் லாரிகள் குறைவான வேகத்தில் சென்று வர அறிவுறுத்த வேண்டும். வேகமாக லாரிகள் சென்று விபத்து ஏற்படுத்துவதை கண்டறிந்தால் அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் விபத்துகள் நிகழாத வகையில் கண்காணிப்பதுடன், விபத்துகளுக்கு காரணமான கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT