விழுப்புரம்

கல்பனா சாவ்லா விருது:விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

DIN

கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ள பெண்கள் வியாழக்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூகத்தில் தானாக முன் வந்து தைரியமாகவும், தனிதன்மையுடனும் எதையும் எதிா்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க பெண்ணுக்கு அவரது துறை சாா்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைகாக ‘கல்பனா சாவ்லா விருது’ ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், சான்று, சால்வை வழங்கப்படும்.

இந்த விருதுக்கு தகுதியுடையவா் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீ விபத்துகள் ஆகியவற்றிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்தல், திருட்டு, கொள்ளை முயற்சியை தடுத்தல் போன்ற துணிகர, வீர சாகசம் செய்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்த விருதுக்கு தகுதியானவா்கள் இணையதளம் வழியாக வியாழக்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT