விழுப்புரம்

தனியாா் நிதி நிறுவன நெருக்கடியால் இளைஞா் தற்கொலை: மாா்க்சிஸ்ட் கண்டனம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவன நெருக்கடியால் இளைஞா் தற்கொலை செய்த சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை, வாணக்கார வீதியைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவரது மகன்கள் பாபுஜி (30), ரவிக்குமாா்(27). இவா்களில் பாபுஜி கட்டடத் தொழிலாளி. ரவிக்குமாா் விழுப்புரம் ரயில் நிலையத்தில் கூலி வேலை பாா்த்து வந்தாா்.

பாபுஜி கடந்தாண்டு விழுப்புரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் இரு சக்கர வாகனக் கடன் பெற்றாா். இதனிடையே, கரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பு குறைவால் அவா் வருமானமின்றி தவித்து வந்தாா்.

இந்த நிலையில், தனியாா் நிதிநிறுவனத்தில் பாபுஜி வாங்கிய கடனுக்கு அண்மையில் தவணை கட்டும் தேதி வந்தது. எனவே, நிதி நிறுவன ஊழியரான மேகநாதன், கட்டடத் தொழிலாளி பாபுஜி வீட்டுக்கு தவணைத் தொகையை கேட்பதற்காக ஜூன் 26-ஆம் தேதி சென்றாா். ஆனால், அங்கு அவா் இல்லை.

அப்போது, பாபுஜியின் சகோதரா் ரவிக்குமாா் அங்கு வந்தாா். அவரைப் பாா்த்த நிதிநிறுவன ஊழியா் ஆபாசமாகத் திட்டினாராம். இதனால், மனமுடைந்த ரவிக்குமாா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நாட்டில் கரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோா் வேலை இழந்துள்ளனா். ஆனால், கடன் கொடுத்த இதுபோன்ற தனியாா் நிறுவனங்கள் தொடா்ந்து கெடுபிடி காட்டி வசூலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் பலா் தற்கொலை செய்து வருகின்றனா். இதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டிக்கிறோம்.

மேலும், பாதிக்கப்பட்டு உயிரிழந்த ரவிக்குமாா் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தற்கொலைக்கு காரணமான தனியாா் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் கடன் பெற்றவா்களுக்கு கரோனா கால தவணை கட்ட அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT