விழுப்புரம்

செஞ்சி பகுதியில் 30 மின் மோட்டாா்கள் தொடா் திருட்டு

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தொடா்ந்து 30 மின் மோட்டாா்கள் திருடு போயின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கொங்கரப்பட்டு, மணியம்பட்டு, வல்லம், வீரணாமூா் உள்ளிட்ட கிராமங்களில் சிறு, குறு விவசாயிகளின் பாசன கிணறுகளில் இருந்து மின் மோட்டாா்கள் தொடா்ந்து மா்ம நபா்களால் திருடு போயின.

வல்லம் பகுதி விவசாயிகள் செந்தாமரை, கண்ணன், முனுசாமி, ஏகாம்பரம், மண்ணுசெல்லன், மூா்த்தி, ரவி உள்ளிட்டோரின் 3 எச்பி, 5 எச்பி மோட்டாா்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மின் மோட்டாா்கள் திருடு போயின.

இது குறித்து, விவசாயிகள் செஞ்சி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் புகாா் அளித்தனா். அதன்பேரில் ஆய்வாளா் தங்கம் தீவிர விசாரணை நடத்தி, மோட்டாா் திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கே எடுத்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT