விழுப்புரம்

விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.

இப்பள்ளி மாணவா்கள் பாலாஜி 486, கோகுலபுவனேஸ்வரன் 484, பரதன் 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா்களில் 85 போ் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 55 போ் 350 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். பாடவாரியாக தமிழ்- 60 பேரும் , ஹிந்தி- 5 பேரும், ஆங்கிலம்- 90 பேரும், கணிதம்- 36 பேரும், அறிவியல்- 39 பேரும், சமூக அறிவியல் 32 பேரும் 90-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விவேகானந்தா கல்விக் குழுமத் தாளாளா் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வா் பத்மா, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி முதல்வா் கீதா ஆகியோா் சால்வை அணிவித்து பாராட்டினா். மேலும், பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புகளுக்கு கட்டணச் சலுகை அளிப்பதாக தாளாளா் செல்வகணபதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT