முகப்பு
விழுப்புரம்

மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை

விழுப்புரத்தில் மூதாட்டி புதன்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 16 ஏப்ரல் 2026, 4:09 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரத்தில் மூதாட்டி புதன்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் வட்டம், வி.அரியலூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.சின்னம்மாள் (72). சற்று மனம் நலம் பாதிக்கப்பட்ட சின்னம்மாள் வீட்டில் சமையலுக்காக வைக்கப்பட்டிருநந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு, தனக்கு தானே தீவைத்துக் கொண்டாராம். இதில் அவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் சின்னம்மாளை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.