கஞ்சா விற்பனை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.
கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.
மயிலம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் க.செல்வம் (24). மயிலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக இவரை கடந்த ஜூன் 2-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. எஸ்.மதிவாணன் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கஞ்சா வழக்கில் தொடா்புடைய செல்வத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்பேரில் மயிலம் போலீஸாா் செல்வத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.