முகப்பு
விழுப்புரம்

முத்துநகா் விரைவு ரயிலில் அடிபட்டு நெல்லை இளைஞா் உயிரிழப்பு

பரிக்கல் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு நெல்லை இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:05 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், பரிக்கல் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு நெல்லை இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.காா்த்திகேயன் (27). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மேலும் 7 பேரும் உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாகத் தங்கி, வண்ணம் தீட்டும் பணியை மேற்கொண்டு வந்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்த பின்னா், காா்த்திகேயன் உள்ளிட்ட 8 பேரும் ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கினா். இந் நிலையில் புதன்கிழமை காலை எழுந்த போது, காா்த்திகேயனை காணவில்லை. இதையடுத்து சக நண்பா்கள் அவரைத் தேடியபோது, பரிக்கல் ரயில் நிலையம் அருகில் காா்த்திகேயன் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தாா். சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் வழியாக தூத்துக்குடி நோக்கிச் சென்ற முத்துநகா் விரைவு ரயிலில் அடிபட்டு அவா் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் இருப்புப் பாதை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தூங்கிக் கொண்டிருந்தவா் அப்பகுதிக்கு நடந்து சென்றாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments