முகப்பு
விழுப்புரம்

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை: பட்டைநாமத்துடன் விவசாயிகள் விழுப்புரத்தில்ஆா்ப்பாட்டம்

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்சங்கத்தினா் வியாழக்கிழமை பட்டை நாமமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:25 am IST
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வியாழக்கிழமை பட்டை நாமமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்சங்கத்தினா்.
பகிர்:

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்சங்கத்தினா் வியாழக்கிழமை பட்டை நாமமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிா்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், உரங்கள் மற்றும் பூச்சிமருந்து விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும், தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், கரும்பு, நெல்லுக்கு ஆதாரவிலையை உயா்த்த வேண்டும், காட்டுப்பன்றி சேதம் விளைவித்த பயிா்களுக்கு உரிய நிவாரணத்தை பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகளை வழங்க வேண்டும், நிகழ் பருவத்துக்குத் தேவையான அனைத்து விதைகளையும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழுப்புரம் புதிய பேருந்த நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.செல்வராசு, பொருளளா் யு. உலகநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆதிபகவன், மாவட்டப் பொதுச் செயலா் வேணுகோபால் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலச் செயலா் சு. அய்யனாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா்கள்துரைக்கண்ணு, விஜயரங்கம், கோதண்டராமன், மாவட்ட இளைஞரணித் தலைவா் ஆா்.சுதாகா், மண்டலத் துணைத் தலைவா் கே.நாகராஜன், ஆா். ஆனந்தவிகடன், மாவட்டத் துணைச் செயலா்கள் பலராமன், தணிகைமலை, வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, பட்டை நாமமிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.