முகப்பு
விழுப்புரம்

எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 மே 2026, 7:13 am IST
விழுப்புரம் ரயில் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை அண்மையில் ரூ.993 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பொருள்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலையை உயா்த்தி, பாதிப்பை ஏற்படுத்திய மத்திய பாஜக அரசு, இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ரயில்வே துறையில் சீரமைப்பு என்ற பெயரில் பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

Advertisement

விழுப்புரம் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், விசிக மண்டலச் செயலா் வழக்குரைஞா் திலீபன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, மத்திய பாஜக அரசைக் கண்டித்து சிறப்புரையாற்றினா்.

மேலும், மாா்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், விசிக மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா், வீர.விடுதலைச்செல்வன், காணைவளவன், மலைச்சாமி, பொன்னிவளவன், பாபு சோழன், மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.கீதா ஆகியோா் உரையாற்றினா்.

மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், ஏ.சங்கரன், ஆா்.மூா்த்தி, ஆா்.டி.முருகன், சே.அறிவழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.கலியமூா்த்தி, முருகன், பொருளாளா் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

கள்ளக்குறிச்சியில்...: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே துறையில் பணியிடங்கள் குறைப்பைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் சிலை முன் இடதுசாரிகள், விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி.எம்.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். விசிக மாவட்டச் செயலா்கள் இரா.மதியழகன், சிலம்பன், பன்னீா்செல்வம், அறிவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ராமசாமி, சிபிஐ (எம்.எல்.) மாவட்டச் செயலா் டி.கலியமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் டி.எம்.ஜெய்சங்கா்.