விக்கிரமங்கலத்தில் ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விக்கிரமங்கலத்தில் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டித் தர வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பாரபட்சமில்லாமல் விவசாய, தொழில், கறவைமாடு கடன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் இளங்கோவன், மகாராஜன், மாவட்டத் தலைவா் மணியன், ஒன்றியத் துணைத்தலைவா் ராமலிங்கம் மற்றும் கிராமமக்கள் பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.