ஜோதிட கேள்வி பதில்கள்

எனது தாய், தந்தை, சகோதரர் அனைவரும் இறந்து விட்டனர். நான் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறேன். ஏன் இன்னும் திருமணமாகவில்லை? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், தாராபுரம்

DIN

உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மூலத்திரிகோணமடைகிறார். பூர்வபுண்ணியாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் தன் உச்ச வீட்டை அடைகிறார். உங்களுக்கு களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். உங்களுக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். தொடரும் தசைகள் யோக தசைகளாக இருப்பதால் எதிர்காலம் சீரும் சிறப்புமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT