ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு ஒரு ஜோதிடர் கும்ப ராசி என்றும், மற்றொருவர் திருக்கணிதப்படி மீன ராசி என்றும் கூறுகிறார். தயவு செய்து தெளிவு படுத்தவும். இவரது வாழ்க்கை, பணி நிலை, உடல்நிலை எவ்வாறு இருக்கும்? - வாசகர், கும்பகோணம்

DIN

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், பூரட்டாதி நட்சத்திரம், நான்காம் பாதம், மீன ராசி என்று வருகிறது. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் அயன ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்ற சுகாதிபதியுடன் இணைந்து சந்திரமங்கள யோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் புதபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். பாக்கியாதிபதியான குருபகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து தைரியம், பூர்வபுண்ணியம் மற்றும் களத்திர ஸ்தானங்களை பார்வை செய்கிறார். இதனால் அவருக்கு சீரான வாழ்க்கை அமையும். கர்மாதிபதியான சனிபகவான் கர்ம ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. இதனால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை அமையும். உடலாரோக்கியமும் சீராக அமையும், எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT